பக்கம் எண் :

124 

தெரிந்தது. இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று கமிஷனர் நினைத்தார். இதற்குள் புகைப்படக்காரர்களும் ஒருவர் பின் ஒருவராக அழைத்துச் செல்லப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். மெலிந்த இளைஞனும், நரைத்த கிழவனும் உள்ளே வந்து பழைய இடத்தில் நின்று கொண்டனர்.

கமிஷனர் அவர்களைச் சோதித்த சி. ஐ. டி. யைப் பார்வையாலேயே அழைத்தார். சி. ஐ. டி. கமிஷனரிடம் வந்தார். மெலிந்த இளைஞன், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஸ்டூடியோவைச் சார்ந்தவன் என்றும், நரைத்த கிழவன், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் புகைப்படக்காரன் என்றும் தெரிவித்தார். இருவரிடமும் இதற்கான அத்தாட்சிகள் இருந்தன ; ஆயுதங்கள் இல்லை என்றும் சொன்னார்.

கமிஷனரின் மனம் திருப்தி அடையவில்லை.

சி. ஐ. டி. க்கள் மேடையையும், மேடையின் அருகேயும் உள்ளவர்களைச் சோதித்து விட்டார்கள். கொலைகாரன் என்று ஐயுறத்தக்கவர் யாரும் இல்லை. இப்போது பார்வையாளர்கள் சோதனைக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழறிஞர் பேசி முடித்துவிட்டார்.

மத்திய மந்திரி எழுந்து நின்றார்.

அன்று வெளியாகும் நூல்களை எழுதிய ஆசிரியர்களையும் பதிப்பாளர்களையும் அறிமுகப்படுத்த, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தம் நூலை மந்திரியிடம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

சேரன் நிகழ்ச்சியை ஆவலோடு பார்த்தவன், திரும்பி அரங்கைப் பார்த்தான். கமிஷனர், துணைக் கமிஷனர் அனைவரும் அவன் கண்ணில் பட்டனர். தன் மடியிலிருந்த டாலரைப் பார்த்தான். அதன் பார்வை வேறு எங்கோ