பக்கம் எண் :

 125

படிந்திருப்பதை அறிந்தான். அவனும் அதன் பார்வை சென்ற திசையில் பார்த்தான். அதே வரிசையில் நான்கு இடம் தள்ளி ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் மடியில் சுமார் ஐந்து வயதுள்ள சிறுவன் உட்கார்ந்திருந்தான். டாலர் பெரியவரைப் பார்க்கவில்லை. அவர் மடியில் உட்கார்ந்திருந்த - சிறுவனைப் பார்க்கவில்லை. அந்தச் சிறுவன் கையையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் கையில் காட்பரீஸ் ஜெம்ஸ் பாக்கெட் ஒன்றிருந்தது. சிறுவன் அந்தப் பாக்கெட்டை ஒரு கையில் பற்றிக்கொண்டு மறு கையால் அதைக் கிழித்துத் திறக்க முயன்று கொண்டிருந்தான். டாலர் அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

சேரன் அதைப் பார்த்தான். டாலருக்கு ஜெம்ஸ் என்றால் உயிர் என்பது தெரியும். உடனே அதன் காதருகே குனிந்து, ‘டாலர் ! உனக்கு ஜெம்ஸ் வாங்கித் தரேன்னு சொன்னேன் இல்லே? சாரி டாலர் ; கூட்டம் முடிஞ்சதும் ஒரு பாக்கெட் ஜெம்ஸ் வாங்கி முழுசா தரேன்” என்று கிசுகிசுத்தான். என்றாலும் டாலரின் பார்வை ஜெம்ஸை விட்டு அகலவில்லை.

கமிஷனர் அரங்கம் முழுவதையும் பார்வையில் அலசினார். அந்த அலசல் எத்தனைாயவது முறை? தெரியாது ! இதுவரை ஐம்பது முறை, அறுபது முறை அரங்கை அவர் பார்வையில் அலசியிருப்பார். யார் மீதும் சந்தேகம் வரவில்லை !

யார் மீதும் வரவில்லையா?

“இந்தக் கிழப் புகைப்படக்காரனின் முகம் என்னவோ போலிருக்கிறதே! ஆனால் இவனிடம் ஆயுதம் ஏதும் இல்லை. கொலை செய்யப் போகும் சேகர் இன்னும் இந்த அரங்கத்துக்கே வரவில்லையோ?

கமிஷனரின் பார்வை சுழல் விளக்காய்ச் சுற்றி நரைத்த கிழவன்மீது வந்து நின்றது.