சேகர் பொத்தானின் மீது கைவைப்பதைக் கமிஷனர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சேகரின் விரல் பொத்தானை அமுக்கியது ! மறுகணம், ‘இந்தச் சங்கம் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என்று வாழ்த்திக் கொண்டிருந்த மத்திய மந்திரியின் மார்பை நோக்கி ஒரு தோட்டா, இராமபாணமாகச் சீறிச் சென்றது. 12 சிறுவர் செய்த சபதம் சேரனின் மடியில் வீற்றிருந்த டாலர் இன்னமும் சிறுவன் கையிலிருந்த ஜெம்ஸ் பாக்கெட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஜெம்ஸ் பாக்கெட்டைக் கையால் கிழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தான். அந்தப் பிஞ்சுக் கை வழுக்கிச் சென்றதே தவிர, ஜெம்ஸ் பாக்கெட்டின் வாயைத் திறக்க வில்லை. பொறுமை இழந்த சிறுவன் பாக்கெட்டை இரண்டு கைகளாலும் பிடித்தான். அதன் ஒரு முனையைத் தன் வாயில் வைத்துப் பற்களால் கடித்தான். கடித்தபடி பாக்கெட்டை இழுத்தான். மறுநொடி, ஜெம்ஸ் பாக்கெட் கிழந்து உள்ளே இருந்த பல்வண்ண ஜெம்ஸ் பல, மேடையில் அமைச்சர் நிற்கும் இடத்தில் விழுந்து தெறித்தன. அதைக் கண்ட டாலர், ஜெம்ஸைப் போல சேரனிடமிருந்து மேடைக்குத் தாவிச் சென்றது; ஒரே பாய்ச்சலில் அமைச்சரின் காலில் போய் மோதிக் கொண்டது. |