பக்கம் எண் :

132 

வேலூரில்-

லாங்பஜார் தெருவழியாக, பாப்பா தன் அம்மாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள். திடீரென்று அவள் பார்வை, ஒரு கடையில் பதிகிறது. உடனே, “அம்மா ! இங்கே பாரேன்! நம் வீட்டுக்கு வந்த அந்த அண்ணன், டிவியில் தெரிகிறான்” என்று உற்சாகமாக் கத்துகிறாள்.

அது தொலைக்காட்சி விற்பனை நிலையம். அதனால் கடையில் பல தொலைக்காட்சியில், கருப்பிலும் கலரிலும் சேரன் காட்சியளித்துக் கொண்டிருந்தான். எதிரே இருந்தவர் செய்தித் துறை அமைச்சர். அவர் முதலமைச்சரின் சார்பாக சேரனைப் பாராட்டிக் கொண்டிருக்கும் காட்சி, அது.

பாப்பா, தைரியமாக நாலடி எடுத்து வைத்துக் கடைக்குள் போகிறாள். பாப்பாவின் அம்மாவும் தயக்கத்தோடு பின்தொடர்கிறாள். இருவரும் தொலைக்காட்சியில் அமைச்சர் சேரனைப் பாராட்டுவதைக் கேட்டுப் பரவசப் படுகின்றனர்.

அமைச்சர் பாராட்டிய பிறகு, “சேரா ! உனக்கு எது வேண்டுமானாலும் கேள் ! எந்த உதவி வேண்டுமானாலும் கேள் ! அதை நிறைவேற்றித் தரும்படி முதலமைச்சர் கூறியிருக்கிறார்” என்று கேட்கிறார்.

இப்போது திரையில் சேரனின் முழுஉருவம் தெரிகிறது.

“எனக்கு எதுவும் வேண்டாங்க ! எங்கப்பா ஏதோ சம்பாதிச்சு என்னைப் படிக்க வைக்கிறார். ஆனால்... ஆனால்...”

சேரன் தயங்குகிறான்.

“தயங்காதே சேரா ! எது வேண்டுமானாலும் கேள்” - அமைச்சர் சொல்கிறார்.