அது ஒரு மனித உடம்பு ! ஒரு வேளை பிணமோ? சேரன் கிலியோடு எழுந்தான். இன்னொரு முறை உருண்டாலும் சரி, அங்கிருந்து உடனே ஓடி விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தான். மறு அடியை எடுக்க முனைந்தபோது- கீழே கிடந்த உடம்பின் கை மெதுவாக அசைந்து வந்து அவனது காலைக் கபக்கென்று பற்றியது. சேரன் ‘அம்மா !’ என்று அலறினான். 2 தேனீ கொட்டியது அலறிய சேரனின் உடம்பு நடுங்கியது. அவன் மீண்டும் அலறியிருப்பான். அதற்குள், “தம்பீ” என்ற குரல் கேட்டது. சற்று முன்பு அவன் விழுந்தது, பிணத்தின் மீதல்ல ; உயிருள்ள ஒரு மனிதன் மீதுதான் ! அவன் கைதான் சேரனின் காலைப் பிடித்தது ; அவனுடைய குரல்தான், அவனை அழைத்தது. “தம்பீ, பயப்படாதே !” அதே குரல் ! “இந்த இருளிலும் என் உடல் நடுங்குவதைக் கீழே விழுந்து கிடக்கும் மனிதன் கவனித்துவிட்டானோ?” |