பக்கம் எண் :

 21

“தம்பீ, அச்சத்தை அகற்றி, நான் சொல்வதைக் கேள்.”

அந்தக் குரல்தான், குறள் போல அறிவுரை கூறியது.

அச்சம் தவிர்!

ஆண்மை தவறேல்!

பாரதியாரின் புதிய ஆத்திசூடியை அவன் படித்திருக்கிறான்! அதைப் படிக்கத் தெரியும்! பயன்படுத்தத் தெரியவில்லை!

“பயப்படாதே, தம்பீ.”

சேரனின் பயம் முற்றிலும் நீங்கா விட்டாலும் படபடப்பு ஓரளவு குறைந்தது. நடுக்கமும்குறைந்தது!

அதைச் சேரனின் காலைப் பிடித்தவனால் உணர முடிந்தது. அவன் பிடியைத் தளர்த்திக்கையை விலக்கினான்.

“பயப்படாதே, தம்பீ!”

குரலில் இருந்த கனிவு அவனை ஓடாமல் நிறுத்தியது.

“தம்பீ, ஒரு உதவி செய்ய வேண்டும்! உன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் நீ இந்த உதவியைச் செய்தே ஆக வேண்டும்.”

திடுக்கிட்டான் சேரன்.

“என்னைக் காத்துக் கொள்ளவா?”

சேரன் கேட்டான்.

“ஆமாம். உன்னைக் காத்துக் கொள்ளத்தான். உட்கார், சொல்கிறேன்.”