“துப்பாக்கியா? ஐயையோ? துப்பாக்கிக் குண்டு பட்டா ரத்தம் கசியுது? முதலில் உங்களைக் காப்பாத்தணும். இருங்க நான் போய் டாக்டரைக் கூட்டியாறேன்.” எழுவதற்கு முயன்ற சேரனின் காலை மீண்டும் அவன் கை தொட்டது. “இப்போது என்னைக் காப்பது முக்கியமல்ல. உன்னைக் காப்பது முக்கியம்.” அவன் அழுத்திச் சொன்னான். “என்னைக் காக்கணும்னு சொல்றீங்க. நான் ஏதாவது ஆபத்திலே சிக்கிட்டேனுங்களா?” “தம்பீ ! இந்த நாடே இப்போ ஆபத்திலே சிக்கியிருக்கு. நாட்டுக்கு அழிவுன்னா, அதிலே வாழற உனக்கும் அழிவு. உன்னைப் போலக் கோடிக்கணக்கானவங்களுக்கும் அழிவு. இந்த நாட்டைக் காக்க நீ ஒரு உதவி செய்யணும். அது உண்மையில் உன்னைக் காக்கச் செய்யற உதவி. நான் சொல்றதைக் கவனமாக் கேளு. நான் இந்திய நாட்டு ஒற்றர் படையினருள் ஒருவன். எனக்கு அளிக்கப்பட்ட பெயர் தேனீ. எங்கள் பிரிவில் நான் திறமையானவனாகக் கருதப்பட்டேன். அப்போதுதான் ஓ. பி. யு. தோன்றியது.” “ஓ. பி. யு. வா? அப்படியென்றால்... ?” சேரன் கேட்டதும் அந்தத் தேனீ விளக்கம் தந்து பேச்சைத் தொடர்ந்தான் : ஒற்றர் படை சில ரகசிய செயல்களுக்கு, ரகசியமான பெயர்களை வழங்கும். அதிலே ஒன்று ஓ. பி. யு. இந்தியா, உலகிலுள்ள பெரிய குடியரசு நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தது. ஆனால் இந்தியா கூட்டு சேராக் கொள்கை |