பக்கம் எண் :

24 

உடைய நடுநிலை நாடு. எந்த வல்லரசின் வலையிலும் விழாத இந்தியாவைத் தம்முடைய ஆதிக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்று பெரிய நாடுகள் விரும்பும். சிறிய நாடுகளோ, எத்தனையோ சாதி மத மொழி வேற்றுமை களுக்கு இடையே இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறாமையால் மனம் புழுங்கும். அதனால் இந்தியாவுக்கு அவப்பெயர் உண்டாக்க, அதற்கு அல்லல் கொடுக்க வெளிநாட்டினர் சிலர் விரும்புவார்கள் ; விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியாவில் குழப்ப நிலையை உண்டாக்க ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள் என்று ஒரு தகவல் ஒற்றர் படைக்கு வந்தது. அந்தத் திட்டத்தைக் கண்டுபிடித்து அழிக்கும் செய்கைக்கு ஆபரேஷன் ப்ளோ அப் (Operation Blow Up) என்று பெயரிட்டார்கள். அதன் சுருக்கமே ஓ. பி. யு.

ஓ. பி. யு வில் பலரை ஈடுபடுத்தினார்கள். இந்தியாவின் மாநிலம் ஒவ்வொன்றிலும் தலைசிறந்த ஒற்றர்கள் செயலில் இறங்கினார்கள். அவர்கள் கண்டுபிடித்த செய்தி இரண்டு. முதலாவது : இந்தியாவில் குழப்பம் விளைவிக்க வெளிநாடுகள் முயல்வது உண்மை; இரண்டாவது : இந்திய மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களை ஒரேநாளில் கொலை செய்து, அப்பழியை உள்ளூர் கட்சிகள் மீது சுமத்திக் கலவரம் உண்டாக்குவது, அவர்கள் திட்டம்.

இந்த இரண்டையும் கண்டுபிடித்த பிறகுதான், தேனீயிடம் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சதித்திட்டத்தில் பங்கு பெற்றுள்ளவர்கள் யார் யார், எனக் கண்டுபிடிக்க வேண்டியது தேனீயின் பொறுப்பானது. தமிழ்நாட்டவனான தேனீ ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளையும் அறிந்தவன். அதனால் பல மாதங்களாகப் பல மாநிலங்களில் சுற்றித்திரிந்தான். இறுதியாக பம்பாயில் சதிக் குழுவைச் சார்ந்த ஒருவனைக் கண்டுபிடித்து, அவனை