அது பிற்பகல், மணி நான்கு. அந்த நேரத்தில் அவன் சாலைகள் இல்லாத பகுதியில் செல்வது ஏன்? யாரையாவது சந்திக்கப் போகிறானா? தேனீயின் பார்வை அவனைத் தொடர்ந்தது. ஒரு நூறுமுழம் வடக்குநோக்கி நடந்து சென்ற அவன், அங்கிருந்து கிழக்கு நோக்கிச் சென்றான். பிறகு மேற்கு நோக்கி நடந்தான். கிழக்கும் மேற்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது, ‘இவன் வாக்கிங் செய்கிறான். உடல் நலத்துக்காக நடைபோடுகிறான்’ என்பது தெரிந்தது. தலைவன் நடந்து கொண்டிருந்த இடத்துக்கருகே ஒரு பங்களா. அதற்குள் இரண்டு சிறுவர்கள் சிவப்பு நிறமுள்ள ஒரு வட்டத்தட்டை (டிஸ்க்) வீசியெறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் வீசியெறியும் தட்டு குட்டிச் சூரியன் போலக் கரகரவென சுழன்றபடி மேல்நோக்கி ஏறி, வானவில்லின் பாதையில் வருவது போலக் கீழ்நோக்கி இறங்கியது. அடுத்த முனையில் இருக்கும் சிறுவன் அதை மிக லாகவமாகப் பாய்ந்து பற்றி, மீண்டும்வீசி எறிந்தான். தேனீயும் ஒரு காலத்தில் சிறுவனாக இருந்தவன் தானே! அவனையறியாமல் அவன் மனம் அந்தப் பறக்கும் தட்டில் பதிந்தது. திடீரென்று பறக்கும் தட்டு கைநழுவித் திசைமாறி மேலெழுந்தது. வெகு உயரத்துக்குப் போனது. அந்தத் தட்டிலேயே தேனீயின் பார்வை படிந்தது. மேலெழுந்த தட்டு கீழ்நோக்கி இறங்கும் இடத்தில் ஒரு பலா மரம். அதில் தேன்கூடு! பறக்கும் தட்டு அந்தத் தேன் கூட்டில் பட்டென்று மோதியது ! உடனே அந்தத் |