கோஹினூர் வைரத்தைக் கண்டெடுத்த குதூகலத்துடன் தேனீ சிவப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். அவன் முகத்தில் ஒரே வியப்பு. அந்த நோட்டில் மாநிலந்தோறும் அந்தச் சதிக் குழுவில் ஈடுபட்டிருப்பவர்களின் பட்டியல் இருந்தது. அதை வியப்போடு புரட்டிய தேனீ கடைசிப் பக்கத்தில் இருந்த செய்தியைக் கண்டு வேதனை அடைந்தான். சிவப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடலாமா? கூடாது ! “ ‘நோட்டுப் புத்தகம் காணோம்’ என்பதை அறிந்து தலைவன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே வந்து தேடுவான். நோட்டு இல்லை என்றால் ; அது யாரிடம் சிக்கியது என்று ஆராய்வான். அதற்கெல்லாம் இடம் தராமல் நோட்டில் இருப்பதைப் படம் எடுத்துக்கொண்டு அதை அங்கேயே போட்டுவிட்டுப் போகலாம்.” ‘தேனீயின் திட்டம் சிறந்ததுதான்’ அது நிறைவேறியிருந்தால் ! பலா மரத்தின் பின்னே நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்தான். அவனிடம் உள்ள நுட்பமாகப் புகைப்படம் எடுக்கும் மிகச் சிறிய ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் அளவுள்ள கேமிராவால் படம் எடுத்தான். ஒவ்வொரு பக்கமாகத் தள்ளிப் படமெடுத்தான். கடைசிப் பக்கத்தைப் புரட்டி வைத்த போது தடதடவென யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. தலைவனும் மற்றொருவனும் அவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து விட்டார்கள் என்பதை உணர்ந்த தேனீ அங்கிருந்து ஓடினான். தலைவன் தன்னுடன் வந்த ஆளிடம், “அவன் ஓ. பி. யு. வின் ஆள். நம்ம திட்டத்தைப் படம் எடுத்து |