விட்டான். அவனைப் பிடி. ஓடு, நான் இன்னும் சிலரை அனுப்புகிறேன்” என்று உத்தரவிட்டான். தலைவனுடன் வந்த ஆள் தேனீயைப் பின் தொடர்ந்து ஓடினான். தலைவன் தேனீ விட்டுச்சென்ற நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பங்களாவுக்குள் ஓடினான். அங்கிருந்து சிலரை அனுப்பினான். தேனீ வெகுவேகமாக ஓடினான். ஃபெர்ன்ஹில் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்துக்குப் போனான். அங்கிருந்து கடைவீதிக்குள் நுழைந்தான். சேரிங்கிராஸு க்கு ஓடினான். இறுதியாகப் புகழ்பெற்ற அரசினர் பூங்காவில் நுழைந்து விட்டான். அப்போதுதான் அவனால் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. தேனீயைப் பிடிக்க வந்தவர்களும் பூங்காவில் நுழைந்தனர். ஏராளமான மரஞ்செடிகள் நிறைந்த பல ஏக்கர் பரப்புள்ள பூங்காவில் தேனீ மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டனர். வந்தவர்கள் திறமையானவர்கள். அவர்கள் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே முன்னேறினர். பூங்காவின் மறுபக்கம் உயரமான இடம். அங்கே ஒரு புதருக்குப் பின் மறைந்திருந்த தேனீயை அவர்கள் பார்த்து விட்டார்கள். அவனைத் தப்பிச் செல்ல விடக்கூடாது என்று ஒருவன் சுட்டான். அது சைலன்சர் பொருத்திய துப்பாக்கி. அதனால் சுட்ட சத்தம் கேட்கவில்லை. துப்பாக்கிக் குண்டு தேனீயின் வயிற்றைத் துளைத்தது. உயிர் போவது போன்ற வேதனை என்றாலும் தேனீ வாய் விட்டுக் கத்தாமல் அங்கிருந்து வேறு புதருக்குள் நுழைந்து விட்டான். |