பக்கம் எண் :

32 

தேடி வந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களிடம் சிக்காமல் ஒரு புதரிலிருந்து மறு புதருக்குத் தாவினான். அவர்கள் பார்க்காதவாறு பூங்காவின் உயரமான கிழக்குப் பகுதியை அடைந்தான். அங்கிருந்த முள்வேலியைத் தாண்டி சாலைக்கு வந்தான். சேரன் நடந்த ஒற்றைபடிப் பாதை வழியே சென்று, மேலே நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டான்.

“தம்பீ... தம்பீ...”

தேனீ குரலை உயர்த்தியதோடு, கையையும் உயர்த்திச் சேரனை அசைத்தான்.

தேனீ கூறியதைக் கேட்டு வியப்பிலும் திகைப்பிலும் சிலையாகி விட்ட சேரன் உணர்வு பெற்றான்.

“என்னங்கோ?”

“நான் சொன்ன கதையைக் கேட்டுத் தூங்கிட்டேயோன்னு நினைச்சேன். கதை கேட்டா குழந்தைங்க தூங்குவாங்க.”

“ஐயோ, நீங்க சொன்னது தூங்கச் செய்யற கதையா ! தூங்குரவங்களை எழுப்புற கதைங்கோ. என்னை அனுமதிங்க. நான் டாக்டரைக் கூட்டியாறேன்.”

“வேண்டாம் தம்பீ. என்னைக் காப்பாத்த முடியாது. ஆனால் நீ உதவி செஞ்சா உன்னைக் காப்பாத்தலாம் ; உன் நாட்டைக் காப்பாத்தலாம்.”

தேனீ கூறியபடி தன் கையால், கால் சட்டைப் பையிலிருந்து ஒரு எக்ளேர் சாக்லெட் அளவுள்ள பொருளை எடுத்து சேரனிடம் நீட்டினான்.

“தம்பீ நீ நாட்டுப் பற்றுள்ள தம்பின்னு தெரியுது. என் வரலாற்றைக் கேட்டப்போ உன் முகத்திலே தெரிஞ்ச