கோபம்-ஆத்திரம்-வேதனை உன் குணத்தைத் தெரிவித்த. என் கையிலிருப்பது நான் எடுத்த மைக்ரோ ஃபிலிம். இதைச் சென்னைக்கு நீயே எடுத்துச் செல்ல வேண்டும். சென்னையில் 693641 என்னும் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு ஓ. பி. யு. வின் தமிழ்நாட்டுத் தலைவனிடம் தேனீ கொடுத்ததாகக் கூறி ஒப்படைக்க வேண்டும். செய்கிறாயா?” வெகு தூரத்திலிருக்கும் சென்னைக்கு அவன் அதுவரை சென்றதே இல்லை. தேனீ கொடுக்கும் ஃபிலிமை சென்னையில் உள்ள ஓ. பி. யு. தலைவனிடம் சேர்க்க முடியுமா? செய்ய முடியாததைச் செய்வதாக வாக்களிப்பது தப்பல்லவா? சேரன் தயங்கினான். “தம்பீ ! தயங்காதே ! நாட்டுக்காக இதைச் செய் !” தேனீ சொன்னான். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே ! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.” சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது ! “வீட்டுக்குச் சேவை செய்ய முடியாத என்னால் நாட்டுக்குச் சேவை செய்ய முடியுமா?”- சேரன் தன்னையே கேட்டுக் கொண்டான். “தம்பீ, தயங்காதே ! முயன்றால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.” சேரன், கையை மெல்ல நீட்டி தேனீயின் கையிலிருந்த மைக்ரோ ஃபிலிம் ரோலை எடுத்துக் கொண்டான். |