பக்கம் எண் :

36 

ஒரு குரல் எழுந்தது ! தொடர்ந்து சிலர் ஓடி வரும் காலடி சத்தம்கேட்டது.

சேரன் புலியைக் கண்ட புள்ளி மானைப் போல ஓடினான்.

வந்தவர்களில் இரண்டு பேர் அவனைப் பின் தொடர்ந்து ஓடினர்.

காலடி ஓசை தன்னை நெருங்குவதை உணர்ந்த சேரன் அப்போதும் திரும்பிப் பார்க்காமல் ஓடினான்.

3
விடாதே, பிடி

சேரன் ஒற்றையடிப் பாதையில் ஓடினான். பாதை, வளைந்தும் நெளிந்தும் இறங்கியும் ஏறியும் சென்றது. சேரன் எந்த இடத்திலும் தன் ஓட்டத்தை நிறுத்தவில்லை. வேகத்தைக் குறைக்கவில்லை. மலையிலிருந்து கீழிறங்கும் ஆறு போல ஓடினான்.

காலடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. எத்தனை பேர் தன்னைப் பின் தொடர்கிறார்கள்? சேரன் திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பாமல் ஓடிக் கொண்டேயிருந்தான்.

எதிரே ஒரு பள்ளம், சேரன் அதில் பொத்தென்று குதித்து ஓடினான். ஓடும்போது காதைத்தீட்டிக்