பக்கம் எண் :

38 

“முட்டாளே ! என்னைப் பிறகு கவனிக்கலாம். ஓடு, அந்தப் பையன் வலப்பக்கம் திரும்பி ஓடினான். அவனைத் தப்ப விடாதே ! பிடி அவனை !”

கைநீட்டியவன், தன் கையை இழுத்துக் கொண்டு ஓடினான். சாலையை அடைந்து, வலப்பக்கம் திரும்பி ஓடினான்.

சாலைகளில் விளக்குகள் எரிந்தன. அந்த ஒளியில், தனக்கு முன்னே அந்தச் சிறுவன் எவ்வளவு தூரத்தில் ஓடுகிறான் என்பதை அறிய விரும்பிப் பார்த்தான், எதிரே சாலை நீண்டு சென்று, கீழ்நோக்கிச் சரிந்து இறங்கியது. அந்தச் சரிவு வரை சாலையில் யாரும் இல்லை. அவன் தன் ஓட்டத்தை நிறுத்தாமல் தலையைத் திருப்பிப் பின்னே பார்த்தான். பின்னேயும் சாலையில் யாருமில்லை. ஒற்றையடிப் பாதையில் விழுந்த அவனுடைய கூட்டாளி அப்போதுதான் சாலைக்கு வந்து சேருவதைக் கண்டான்.

‘பார்வையைத் திருப்பி முன்னே செலுத்தினான். பையன் சரிவில் இறங்கி ஓடிக் கொண்டிருப்பான்’ என்று நினைத்தபடி அவன் ஓடினான். மூன்று நிமிடத்தில் சாலை சரிந்து கீழிறங்கும் இடத்தை அடைந்தான். அங்கும் யாருமில்லை.

அவன் மேலும் ஓடாமல் நின்றான். அதற்குள் விழுந்து எழுந்தவன் அங்கே வந்துவிட்டான். அவன் தன்னை ஏதாவது கேட்கும் முன் தானே அவனிடம் ஒரு கேள்வி கேட்டான்.

“ஜாக்கி! பையன் வலப்பக்கந்தான் திரும்பினானா? நல்லா பாத்தையா?”

“நல்லாப் பாக்காமச் சொல்லுவேனா! இந்தப் பக்கந்தான் திரும்பினான். ஏதாவது பங்களாவுக்குள் நுழைஞ்