பக்கம் எண் :

 4 

குழந்தைக் கவிஞர் தொடர்பு கொள்ளும் பத்திரிகைகளில் என் தொடர்கதைநிச்சயம் இடம் பெறும். அதற்குக் கோகுலமும் விலக்கல்ல. என்னைத் தொடர்கதை எழுதும்படி தூண்டி, அதை ஏற்று வெளியிட்ட குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களுக்கு என்நன்றி.

என் இலக்கிய நூல்கள் பலவற்றை வெளியிட்ட வர்த்தமானன் பதிப்பகம், முதல் முறையாக எனது சிறுவர் நாவலை வெளியிடுகிறது. பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.

அன்பன்,
பூவண்ணன்