பக்கம் எண் :

  

ஒரு பூனை
புலியாகிறது

டாக்டர் பூவண்ணன்

1
காலைப் பிடித்த கை

தடதடவென்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டிய ஒலி, இடிமுழக்கம் போல எங்கும் பரவி எதிரொலித்தது. சம்பிரதாயத்துக்காகக் கைதட்டுவதாக இருந்தால்அது சட்டென்று நின்றிருக்கும். மாணவர்கள் பேச்சாளரின் சொற்பொழிவைச் சுவைத்து ரசித்தனர் ; அந்த ஈடுபாட்டால் பிறந்த கைதட்டொலி, அது. அதனால் பேச்சாளர் ஒலிபெருக்கியின் முன்னிருந்து விலகி, மேடையில் தனக்குரிய இடத்தில் போய் அமர்ந்த பிறகும் கைதட்டல் நீடித்தது. இலக்கிய மன்றத்துச் செயலாளன் நன்றி கூற வந்த பிறகுதான் கைதட்டல் நின்றது.