பக்கம் எண் :

44 

“மணி ஏழாயிட்டுது. ஆனால் பொழுது விடியலே. ஊட்டி சூரியன் கொஞ்சம் சோம்பேறி. தாமதமாத்தான் எழுந்திருப்பான். நீ அவசரமாக போகணுன்னு சொன்னதாலே உன்னை எழுப்பிட்டேன். டிரைவரையும் எழுப்பச் சொல்லிட்டேன். சீக்கிரம் பல் தேய்ச்சு, முகம் கழுவித் தயாராகு. டிபன் ரெடி. சாப்பிட்டுட்டுப் போகலாம்.”

“நன்றி விஜய்” என்றபடி போர்வையை விலக்கி எழுந்தான் சேரன். அடுத்த அரை மணிக்குள் சுடச்சுட இட்லி சாப்பிட்டு விட்டுத் தயாரானான்.

விஜய் அவனிடம் இருபது ரூபாய் கொடுத்தான்.

“சேரா ! இங்கே அப்பாவுக்குக் கார் தேவை. அதனால் நீ பஸ்ஸில் ஊருக்குப் போகணும். டிரைவர் உன்னை பஸ் ஸ்டாண்டில் விடுவான். கோவைக்கு பஸ் கட்டணம் பத்து ரூபாய்க்குள் இருக்கும். அதற்குத்தான் இந்தப் பணம்.”

“அப்போ, பத்து ரூபாய் போதுமே எதுக்கு இருபது ரூபாய்?” என்றபடி, இரண்டு பத்து ரூபாயில் ஒன்றை அவனிடம் நீட்டினான் சேரன்.

“இருக்கட்டும். ஒருவேளை பதினோரு ரூபாயாக இருந்தால் என்ன செய்யறது? எனக்கு பஸ்சார்ஜ் தெரியாது. மீதியை அப்புறம் வாங்கிக்கிறேன்.”

சேரன் இருபது ரூபாயைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். இருவரும் பங்களாவின் வெளியே வந்தார்கள்.

கார் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர், அதை நிறுத்தி, கார் கதவைத் திறந்துவிட்டான். சேரன் பின் சீட்டில் உட்கார்ந்தான். விஜயிடம் விடை பெற்றுக்கொண்டான்.