அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அதே மனிதர்கள் கோயமுத்தூரில், நெசவாளர் காலனியில், சேரனின் வீட்டின் மூடிய கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள்! 4 நண்பனின் தவறு சேரனின் வேண்டுகோளை ஏற்று, காரைக் கிளப்பிய டிரைவர் பின்னே வரும் அம்பாசிடருக்குப் போக்குக்காட்டி ஏமாற்ற நினைத்துக் காரைச் செலுத்தினான். அம்பாசிடர் தன்னைப்பின் தொடர்வதை அறிந்ததும், உற்சாகத்தோடு, உதகை மார்க்கெட்டைச் சுற்றிக் கொண்டு, வந்த வழியே திரும்பினான். அம்பாசிடரும் அதைத் தொடர்ந்தது. கார், சூப்பர் மார்க்கெட்டை நெருங்கிய போது, அம்பாசிடரை ஓட்டிக் கொண்டிருந்த குறுந்தாடிக்காரன்- அவன்தான் பாபு, கொஞ்சம் மிரண்டவனாய், “ஜாக்கி! இதென்ன, பியட் கார் வந்த வழியிலேயே திரும்பிப் போகுதே!” என்று வியப்பை வெளிப்படுத்தினான். டிரைவரின் அருகே உட்கார்ந்திருந்த சுருள் முடிக்காரனான ஜாக்கி, “இதை மட்டுந்தான் கவனிச்சியா? காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பையனையும் காணோம். அதைக் கவனிக்கலையா?” என்று கேட்டான். அதற்குள் பியட் கார் சேரிங்கிராஸை அடைந்து திரும்பிக் கொண்டிருந்தது. அதனால் அதன் வேகம் |