பக்கம் எண் :

50 

குறைந்திருந்தது. எனவே பாபு அந்தக் காரை நன்றாகப் பார்க்க முடிந்தது. பின் சீட்டில் யாரும் இல்லை. காரில் டிரைவரைத் தவிர யாரும் இல்லை.

“ஆமாம். பொடியனைக் காணோம். அவன் எங்கே போனான்?”

“லாரி நம்மை வழிமறிச்சுதே ! அப்போ, காரிலிருந்து இறங்கிப் போயிருப்பான். பையன் இல்லைங்கிறதை நானும் கொஞ்ச நேரம் பொறுத்துத்தான் கவனிச்சேன். அதுக்கப்புறம் பிடிக்க முடியும்னு தோணலை. அதான் சும்மா இருந்துட்டேன்.”

“இப்போ வீணா எதுக்கு இந்தக் காரைப் பின் தொடரணும்?”

“நாம நேத்து பையன் மறைஞ்ச ரோடிலே காத்திருந்து இந்தக் காரையும், காரிலிருந்த பையனையும் பிடிச்சோம்.”

“ஆமாம். பையன் அவன்தான்னு நீ சொன்னே. அதே நீலநிற ஸ்வெட்டர் போட்டிருக்கான்னு காட்டினே.”

“இப்போ அவனைத்தான் நேத்து நாம விரட்டினோங்கறது உறுதியாயிடுச்சு. அதனாலேதான் நம்மைப் பார்த்ததும் பயந்து வழியிலே இறங்கிட்டான். நாம காத்திருந்த ரோடிலே திடீருன்னு காரைப் பார்த்தோம். அது எந்த வீட்டிலிருந்து வந்ததுன்னு நமக்குத் தெரியாது. பியட் பின்னாடியே போய், அந்த வீட்டைக் கண்டு பிடிப்போம். அதுக்கப்புறம் பையனைப் பிடிச்சுடுவோம்.

ஜாக்கியின் யோசனையின்படி அம்பாசிடர், பியட்டைப் பின்தொடர்ந்து, விஜய் பங்களாவுக்குள் அது நுழைந்ததைப் பார்த்துவிட்டுப் பிறகு திரும்பியது.