5 சேரன் எங்கே? ஊட்டியில் தன்னை விரட்டியவர்கள் இங்கே வந்து விட்டார்கள் என்பதைப் பார்த்த சேரன் திடுக்கிட்டது, ஒரு நொடிதான். ‘அதோ ! இரண்டு பேரும் லாரியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கக் கூடாது !’ என்று சேரனின் அறிவு எச்சரிக்கை செய்தது. சேரன், தனக்குப் பக்கத்திலிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு, நாயோடு பொத்தென்று கீழே குதித்தான். அதைப் பார்த்ததும், “ஏய் ! அங்கேயே நில் !” என்று கத்தினான், ஜாக்கி. அந்த வாக்கியத்தை அவன் சொல்லி முடிப்பதற்கு முன், இடப்புறம் இருந்த கரும்புத் தோட்டத்தை நோக்கி நாயைச் சுமந்தபடி ஓடிய சேரன், சில விநாடிகளில் அக்கரும்புத் தோட்டத்தில் புகுந்து மறைந்தான். ஜாக்கி, உடனே, “பாபு, ஓடு ! பையன் இந்த முறையும் தந்திரமாகத் தப்பப் பார்க்கிறான். பிடி அவனை” என்று கத்தினான். பாபு வேகமாகக் கரும்புத் தோட்டத்தில் புகுந்து ஓடினான். சாலையைக் காட்டிலும் கரும்பு விளைந்த வயலின் பரப்பு தாழ்ந்து இருந்தது. அதனால் சாலையில் நின்ற |