பக்கம் எண் :

 61

ஜாக்கியால் கரும்புகளின் தோகைகள், அசைவதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒரு சதுரத்தை இரண்டு முக்கோணமாக வெட்டும் ஒரு இடைக் கோடு போல கரும்புத் தோட்டத்தின் மேற்பரப்பில் தோகைகளின் அசைவு, அலைபோலப் படருவதை ஜாக்கி பார்த்தான். சேரனைப் பாபு விரட்டிச் செல்கிறான் என்பதை உணர்ந்தான்.

லாரியிலிருந்த கந்தப்பனுக்கும் அவனுக்குப் பக்கத்திலிருந்த கிளீனருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்களும் சேரன் நுழைந்த கரும்புத் தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜாக்கி ஒரு கணம் தன் பார்வையைக் கரும்பிலிருந்து சாலைக்குத் திரும்பியபோது, லாரி இன்னும் அங்கேயே நிற்பதையும், அதிலிருப்போர் கரும்புத் தோட்டத்தையே பார்ப்பதையும் கவனித்தான். உடனே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது என்று முடிவு செய்தான்.

ஜாக்கியின் வலக்கரம் அவனது பேண்ட் பாக்கெட்டில் நுழைந்து வெளிப்பட்டபோது அதில் ஒரு ரிவால்வர் இருந்தது. ஜாக்கி வேகமாக நடந்து லாரியை அடைந்தான். கையிலிருந்த ரிவால்வரினால் லாரியைத் தட்டி, டிரைவரின் கவனத்தைத் திருப்பினான்.

கந்தப்பன் ஜாக்கியையும், அவன் கையிலிருந்த ரிவால்வரையும் பார்த்துத் திகைத்தான். கிளீனரோ நடுங்கினான்.

“டிரைவர், உங்களுக்கும் உங்கள் லாரிக்கும் சேதம் ஏற்பட வேண்டாம் என்ற நினைத்தால்உடனே புறப்படுங்க. அதோடு இங்கே என்ன நடந்தது என்பதைப்பற்றி