பக்கம் எண் :

64 

“பாபு...”

ஜாக்கி, குரல் கொடுத்ததும், ‘எஸ் ஜாக்கி’ என்ற பதில் வந்ததுடன் எதிரே வந்தவன் கொஞ்சம் வேகமாக நடந்தான்.

ஜாக்கி திடுக்கிட்டான்! அவன் திடுக்கிட்டமைக்குக் காரணம். எதிரே பாபு மட்டும்-பாபு ஒருவன் மட்டுமே வந்து கொண்டிருந்ததுதான். அப்படியானால் மீண்டும் பொடியன் தப்பித்துக்கொண்டானா? சேரன் எங்கே?

ஜாக்கியும் பாபுவை நோக்கி வேகமான நடந்தான். சில விநாடிகளில் இருவரும் நெருங்கியபோது இருவர் வாயிலிருந்தும் ஒரே கேள்விதான் வெடித்துக் கிளம்பியது.

பையன் கிடைத்தானா?

ஜாக்கி தான் ஏமாந்து விட்டதை நன்றாக உணர்ந்து கொண்டான்.

“என்ன பாபு இது ! நான் கேக்கற அதே கேள்வியை நீ கேக்கறே. நீதானே பையனைப்பின் தொடர்ந்து போனே. பையன் கிடைச்சானான்னு நான் கேட்கிறது நியாயம். நீ தான் பதில் சொல்லணும். சொல்லு பாபு என்ன நடந்தது? சேரன் எங்கே?”

“கரும்புத் தோட்டத்திலே பையன் நுழைஞ்சதை நீ காட்டினே. உடனே நான் அவனைப் பிடிக்க ஓடினேன். அவன் எனக்கு முன்னாடி கொஞ்ச தூரத்தில் ஓடறதை உணர முடிஞ்சுது. கரும்புகளின் அசைவைப் பின்பற்றி ஓடினேன். கரும்புகளை விலக்கி, வழியுண்டாக்கிப் போறது எனக்குச் சிரமமாயிருந்தது. பையன் பழக்கப் பட்டவன் போல் முன்னேறிட்டான். அதே நேரத்திலே காத்தும் பலமா வீசிச்சு. எல்லாக் கரும்புகளும் அசையவே, நான் அவனைத் தவற விட்டுட்டேன். இந்த வரப்பிலே ஏறி