பக்கம் எண் :

 67

ஜாக்கியைப் போலவே நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் அப்போது சேரன் எங்கே இருந்தான்.

6
வேலூர் வள்ளல்கள்

ஜாக்கி தன் வீட்டுக்குள் சென்று தொலைபேசியில் சென்னையில் உள்ள அவனுடைய கூட்டத்தாரோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போதும் அவன் மனம், ‘சேரன் எங்கே?’ என்று கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அவனுக்கு அருகே, இருபது மீட்டர் தூரத்தில் சேரன் இருந்தான் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவான். காவேரி மின்நகரிலிருந்து அவன் வேலூரை அடையும் வரை சேரன் அவனுக்கு இரண்டு மீட்டர் தூரத்தில்தான் இருந்தான் என்பதை அறிந்தால் மூர்ச்சையாகி விடுவான்.

சேரனை இப்போது நாம் சந்திக்கலாம்.

கோட்டைப் பிள்ளையார் கோவில் தெரு சென்று சேரும் சாலையில் ஜாக்கியின் வெள்ளை அம்பாசிடர் கார் நின்றிருந்தது. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. அம்பாசிடர்காரின் பின்னேயுள்ள டிக்கி மெல்லத் திறந்தது. டிக்கிக்குள் சேரன் இருந்தான். அவன் நாயும் இருந்தது.