பக்கம் எண் :

 7

அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, சேரனைத் தானே தேர்ந்தெடுத்து நண்பனாக்கிக் கொண்டான். மாலையில் சேரனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, வீட்டிலே கொஞ்ச நேரம் அவனுடன் டேபிள் டென்னிஸ் ஆடுவான். பிறகு ஆறு மணி அளவில்தான் சேரனை வீட்டுக்கு அனுப்புவான் ; சேரனின் வீடு, பள்ளிக்கூடத்துக்கும் விஜய் பங்களாவுக்கும் இடையே, நெசவாளர் காலனியில் இருந்தது.

அன்றும் வழக்கம்போல் விஜய், சேரனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான். “விளையாட்டைத் தொடங்கலாமா?” என்று கேட்டான் சேரன்.

“இன்றைக்கு விளையாட்டு வேண்டாம்.”

சேரன் விஜயின் முகத்தை உற்றுப் பார்த்தான். “என்ன விஜய், பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்டது முதல் ஏதோ நினைவாக இருக்கே. என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“சேரா ! சென்னையிலிருந்து வந்த அறிஞர் பேசிய பேச்சு என் மனத்தில் அப்படியே நிறைஞ்சி நிற்குது. நீ அந்த அருமையான பேச்சை ஒரு காதிலே வாங்கி மறு காதிலே விட்டுட்டையா?”

விஜய் கேட்டான்.

சென்னை அறிஞர் பேச்சு வெறும் காற்றிலே கலக்கும் பேச்சல்ல. கூட்டத்தில் அக்கரையற்றவர், சொற்பொழிவுக் கேட்பதில் விருப்பமற்றவர் முதலிய அனைவரும் ஐந்து நிமிட நேரத்தில், அவர் பேச்சில் ஒன்றி விட்டார்கள். ‘இதுதான் கேட்டார்ப் பிணிக்கும் பேச்சு’ என்று சொல்லத்தக்கது. செவியிலே நுழைந்து நெஞ்சிலே இறங்கி நிலைக்கும் பேச்சுஅது. சேரன் நெஞ்சிலும் அந்தப் பேச்சு