டாலர் அவனுக்குப் பக்கத்திலே இருந்தது. அது யாரையோ பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. சேரன் பார்த்தான். திண்ணை அருகே சுமார் பத்து வயதுள்ள ஒரு சிறுமி நின்றிருந்தாள். பொழுது நன்றாக விடிந்திருந்தது. சேரன் எழுந்து உட்கார்ந்தான். “நாய் உன்னதா? ரொம்ப அழகா இருக்கு !” என்றாள் அந்தப் பெண். “ஆமாம் பாப்பா ! இது உன் வீடா?” - சேரன் கேட்டான். “அட, என் பேரு உனக்கு எப்படித் தெரியும்? பர்வதகுமாரின்னு எனக்குப் பேரு வச்சாங்களாம். ஆனா பாப்பான்னு எங்கம்மா கூப்பிட்டதாலே, அதுவே பேராயிடுச்சு. பள்ளிக்கூடத்திலே கூடப்பாப்பான்னுதான் பேர் கொடுத்தாங்க. உம் பேரு என்னண்ணா?” அரை நிமிடத்தில் தன்னை அண்ணனாக்கிக் கொண்ட அந்தத் திடீர்த் தங்கையை அன்போடு பார்த்து அதிசயித்த அவன், “சேரன்” என்றான். “தெரியுமே !” பாப்பா சொன்னதைக் கேட்டுத் திகைத்த சேரன் “தெரியுமா? என் பெயர் சேரன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். “இல்லேண்ணா. சேரன் என்கிற பேரைத் தெரியும். நான் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டிருக்கிறப்போ, பாடத்தில் படிச்சேன். சேரன் கணைக்கால் இரும்பொறை ! இவன் மானம் மிக்க சேரன்! காவலாளிங்க இழிவு செஞ்சதாலே, தண்ணீர் குடிக்காமே மானத்தோடு செத்துட்டான்.” பாப்பா சொன்ன சேரன் கதை அவன் கவனத்தைக் கவரவில்லை. ஆனால், “நான் பள்ளிக்கூடத்திலே படிச்சுக் |