“அம்மா, வேண்டாம்மா” - அழுகை கலந்த குரலில் கூறினான். “நீ நாட்டுக்கு ஏதோ நன்மை செய்யும் செயலுக்காகச் சென்னைக்குப் போகணும் இல்லையா?” “ஆமாம்.” “அதற்குப் பணம் வேணும் இல்லையா?” “ஆமாம்.” “அப்போ தடுக்காதே. நீ எவ்வளவு தீரமா லாரியிலே ஏறி - கரும்புத் தோட்டத்திலே மறைஞ்சு - உன்னைப் பிடிக்க வந்தவங்க காரிலேயே தப்பிச்சு வந்தே ! உனக்குப் பாப்பா உதவணும்னு நினைச்சதே எனக்குப் பெருமைதான். அவங்கப்பா மனசு அதுக்கு. நான் தப்பா நினைக்கமாட்டேன். பாப்பாவின் பணம் நல்லதுக்குப் பயன்பட்டாச் சரிதான்.” பாப்பாவின் அம்மா மண் உண்டியை உடைத்தாள். சிதறிய காசுகளை ஒன்று திரட்டி எண்ணிப் பார்த்தாள். “பதிமூன்று ரூபாய் ஐம்பது காசு இருக்கு. சென்னைக்குப் பஸ் சார்ஜ் பத்துப் பதினொருரூபாய் இருக்கும். எடுத்துக்கோப்பா.” சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரியவள்ளலாக அவன் மனம் நினைத்துப் பாராட்டியது. அம்மாபோன அரைமணி கழித்துப் பாப்பா வந்தாள். பரவசத்தோடு வந்தாள். “அண்ணா, இப்ப நீங்க |