சென்னைக்குப் புறப்படலாம். பஸ் ஸ்டாண்டுக்கு நான் வழி காட்டறேன்” என்றபடி வீட்டைப் பூட்டால் பூட்டிக் கொண்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் பேருந்து நிலையத்தை அடைந்தனர். சென்னை புறப்படத் தயாராய் ஒரு பஸ் நின்றிருந்தது. பாப்பாவிடம் குரல் தழுதழுக்க விடைபெற்றுக் கொண்டு, டாலருடன் பஸ்ஸு க்குள்ளே ஏறினான், சேரன். இரண்டு நிமிஷத்தில் டாலரும் அவனுமாகக் கீழே இறங்கிவிட்டனர். “என்னண்ணா?” பாப்பா கேட்டாள். “நாயை வச்சுக்கிட்டு பஸ்ஸிலே வரக்கூடாதுன்னு கண்டக்டர் சொல்றார்.” சொல்லிலேயே சேரனின் சோகம் தெரிந்தது. “நாயை என்னிடம் விட்டுட்டுப் போண்ணா.” “பாப்பா ! சென்னைக்கு நாணும் போகணும் ! நாயும் போகணும் ! ரெண்டு பேரிலே ஒருத்தர் போனாப் பலனில்லை !” சேரனின் சோகம் அதிகமானது. ‘இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது’ என்று தெரியாமல் திகைத்தான், சேரன். |