பக்கம் எண் :

82 

“கவனிக்கவில்லை.”

ஹனிமேன் உடனே போலீஸ் கமிஷனரின் உதவியை நாடி அந்த ஆட்டோவைக் கண்டுபிடிக்க நினைத்துப் புறப்பட்டான்.

ஹனிமேன் போலீஸ் கமிஷனரைத் தேடிப் போன அதே நேரத்தில், சேரன் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சிறு வீட்டின் ஓர் அறையில் இருந்தான். அவனை ஆட்டோவில் கடத்தி வந்த இருவரும், புதிதாக மற்றொருவனும், ஜாக்கியும் அவன் எதிரே நின்றிருந்தனர்.

ஜாக்கி வேலூரிலிருந்தே போன் செய்து, சடை சடையா முடிதொங்கும் அழகான நாயுடன் ஒரு பையன் சென்னைக்கு வருவான். லாரியில், பஸ்ஸில் வரக்கூடும். அதனால் அவனைப் பிடிக்க ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தான். அதனால், சென்னையின் எல்லையிலே லாரியைக் கண்காணிக்கச் சில ஆட்கள், பஸ் ஸ்டாண்டைக் கவனிக்கச் சில ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான், சேரன் அட்டைப் பெட்டியிலிருந்து அழகான நாயை வெளியே விட்டதைக் கவனித்தான். அவன்தான் தேவையான பையன் என்பது தெரிந்தது. உடனே கடத்திக் கொண்டு வந்துவிட்டான்.

ஜாக்கி சேரனைப் பார்த்துச் சிரித்தான்.

“பொடியா ! ஊட்டியிலே ரெண்டு தரம் தப்பிச்சுட்டே. கரும்புத் தோட்டத்துலே தப்பிச்சுட்டே. இனிமே தப்பிப் போக முடியாது. ஊட்டியிலே தேனீ உன்னிடம் என்ன கொடுத்தான்? என்ன சொன்னான்?”

ஜாக்கி கேட்டான்.

சேரன் பதில் சொல்லவில்லை.

“சரி, நானே சொல்றேன். தேனீ உன்னிடம் ஒரு மைக்ரோ பிலிம் ரோல் கொடுத்தான் இல்லையா? அதைச்