பக்கம் எண் :

84 

ஒரு கை இடுப்பைத் தடவியது. ஒரு கை தாடையைத் தடவியது.

“உம்... சொல்லு...”

“தேனீ மைக்ரோ பிலிம்னு ஒரு சின்ன பொருளைக் கொடுத்தார். அதைச் சென்னையில் ஒருவரிடம் சேர்க்கச் சொன்னார்.”

“எடு அந்த பிலிமை !”

“அது... அது... என்னிடம் இல்லே !”

ஜாக்கியின் குறிப்பறிந்த எருமை மாடு, ஒரு கையால் புடலங்காயைத் தூக்கி நிறுத்துவது போலச் சேரனைத் தூக்கி நிறுத்தினான். மறு கையால் அவனைச் சோதித்தான். அவன் பாக்கெட்டிலிருந்த ரெண்டு ரூபாய் நோட்டையும் சில்லறையையும் எடுத்துக் கீழே போட்டான். அவற்றைத் தவிர வேறொன்றும் இல்லை. உடனே பிடித்த பிடியைத் தளர்த்த, சேரன் பொத்தென்று தரையில் விழுந்தான்.

“பிலிம் எங்கே?”

சேரன் பேசவில்லை.

“மாது...”

ஜாக்கி குரல் கொடுக்க, மாது, அதாவது எருமைமாடு பளார் என்று ஓர் அறை கொடுத்தான். சேரன், “அம்மா... ” என்று அலறினான். தாடை எலும்பு நொறுங்கி விட்டதுபோல் உணர்வு. எருமை மாட்டின் கை மீண்டும் உயர்ந்தபோது, சேரன் அலறினான் ; “பிலிம் நாய்கிட்டே இருக்கு.”

நாய் என்ற சொல்லைக் கேட்டதும், அவனை ஆட்டோவில் கடத்தியவன், “ஜாக்கி, இவனை ஆட்டோவில் இழுத்துக் கொண்டதும், இவனுடன் இருந்த நாய் என்