காலைக் கவ்வியது. ஒரு உதை விட்டேன். வெளியே போய் விழுந்தது” என்றான். “உம்... அதுதான் நீ கோயமுத்தூரிலிருந்து நாயோட புறப்பட்ட ரகசியமா? பிலிமை நாய் உடம்பிலே மறைச்சு வச்சிருக்கே. சரி, நாயைக் கண்டுபிடிக்கறேன்” என்ற ஜாக்கி, கிளம்பினான். “மாது ! பையனை இந்த அறையிலேயே பூட்டிவை. பையன் பொடியன். ஆனால் பலே கைகாரன். மூணுமுறை என்னை ஏமாத்திட்டுத் தப்பிச்சவன். அதனாலே எச்சரிக்கையோடு பார்த்துக்கோ”- ஜாக்கி திருவள்ளுவர் ஆனான். “கவலைப்படாம போப்பா. இவன் விடற மூச்சுகூட எனக்குத் தெரியாம வெளியே போகாது” எருமைமாடு தன்னைப் புகழ்ந்து கொண்டான். ஜாக்கியும், இரண்டு பேரும் வெளியே போனார்கள். கடைசியாக எருமை மாடு வெளியே போனான். கதவை இழுத்து மூடினான். பூட்டினான். சேரன் தனியே இருந்தான். இப்போது விம்மி விம்மி அழுதான். “நாட்டுக்குச் சேவை செய்கிறவர்கள் எத்தனை சித்திரவதைகள் அனுபவிக்கிறார்கள்! தன் உயிர் போனாலும் டாங்கை வீழ்த்திய சிறுவர்கள் எங்கே? நான் எங்கே? இரண்டு அறையில் பிலிம் இருந்த இடத்தைச் சொல்லி விட்டேனே !” சேரன் இப்படி நினைத்துத்தான் அழுதான். “நாட்டுச் சேவைக்குப் பலம்கூடப் போதும் ! என்னைப் பார் ! நான் பலசாலியுமல்ல! சுமாரான உடம்பு. சின்னக் |