பக்கம் எண் :

 87

“அறிவே வேலை செய் ! என்னைக் காக்க அல்ல ! என் நாட்டைக்காக்க ! பிளீஸ், அறிவே வேலை செய்.”

பக்தனைப் போலப் பிரார்த்தனை செய்து கொண்டே அவன் பார்வை அந்த அறையை அணுஅணுவாக அலசிக் கொண்டிருந்தது.

சரியாக ஐந்தாவது நிமிடம், “ஐயோ ! காப்பாத்து ! தீ ! தீ ! அறை தீப்பிடிச்சு எரியுதே !” என்று சேரன் அலறிய சத்தம், அந்தச் சின்ன வீட்டின் வெளியே வாசற்படியில் உட்கார்ந்திருந்த எருமை மாட்டின் காதில் விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து உள்ளே ஓடினான். சேரன் பூட்டப்பட்ட அறையின் கதவை அடைந்தான்.

அறையின் இரட்டைக் கதவுகளுக்கிடையே தெரிந்த இடைவெளியில், உள்ளே தகதகவென்று எரிவதை செந்தீயின் நாக்குகள் நடனமாடுவதைக் கண்டான்.

8
தீ செய்த உதவி

“அறிவே வேலை செய்” என்று வேண்டியபடி சேரன் தான் இருந்த அறையை நன்றாகப் பார்த்தான்.

அது சின்ன அறை. ஆனால் ஒழுங்கான அறை. இரண்டு சன்னல்கள் இருந்தன. சன்னலில் அழகான திரைகள் (ஸ்கிரீன்) தொங்கின. சேரன் திரைகளை விலக்கிச் சன்னல் கதவுகளின் கொக்கிகளை நீக்கிக் கதவைத் திறக்க முயன்