வெள்ளையருடன் போரிட்டார். ஆண்களும், பெண்களும் நாட்டுப் பணியில் ஈடுபட்டபோது சிறுவர்கள் சும்மாயிருப்பார்களா? அவர்கள் வெள்ளையரின் டாங்குப்படையை எதிர்த்துப் போரிட்டனர். பிணங்கள் நிறைந்த தெருவில் ஆங்கிலேயரின் டாங்கு பெரிய அரக்கன் போல வரும். பாலர் படையைச் சேர்ந்த சிறுவன் வெடிகுண்டோடு, பிணங்களிடையே பிணமாகப் படுத்திருப்பான். டாங்கு அச்சிறுவன்மீது ஏறி அவனை நசுக்கும்போது, குண்டு வெடிக்கும். டாங்கும் சிதைந்து விழும். தற்கொலை படைபோலப் பாலகர்கள் தம்உயிரை இழந்து செய்த தியாகத்தைச் சென்னை அறிஞர் சொன்னபோது, கண்கள் கலங்கின; உடல் சிலிர்த்தது. அறிஞர் ஒரு கணம் பேசாது நின்றாரே ! சேரன் நினைவில் இவையெல்லாம்திரைப்படம்போல ஓடின. “ஆமாம் விஜய். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்கு அந்தச் சிங்கப்பூர் இந்தியச் சிறுவர்கள் செய்த தியாகமும் ஒரு காரணம்” என்றான் சேரன். “உலகின் பல நாடுகளில் சின்னஞ் சிறுவர்கள். நாட்டுப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதைச் சொன்னார். முன்பு நடந்த வியட்நாம் போரில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், தமக்காகத் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கிகளை ஏந்திப் போரிட்டதைச் சொன்னாரே ! சேரா. நம் நாடு நமக்காக என்ன செய்தது என்று கேட்கவே கூடாது. நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.” விஜய் சொல்லி முடிக்கும்போது, சமையற்காரன் இரண்டு பிளேட்டில் கேக்கும், வறுத்த முந்திரிப் பருப்பும் கொண்டு வந்து இருவர் முன்பும் வைத்தான். கூடவே சூடான காப்பியும் வைத்தான். சேரன் சாப்பிடத் தொடங்கினான். விஜய் தன் பேச்சையே தொடர்ந்தான். |