பக்கம் எண் :

94 

சேரன் நிமிர்ந்து வெளியே பார்த்தான். எதிர்ப் புறத்தில் ஒரு டாக்ஸி நிற்பது தெரிந்தது.

“ஒரு டாக்ஸி இருக்குதுங்க சார்.”

“சேரா ! அந்த டாக்ஸி டிரைவரை ஒரு நிமிஷம் இந்தப் போனில் பேசச் சொல்லு. நீ வர வேண்டிய அட்ரஸை டிரைவரிடம் நான் சொல்றேன்.”

சேரன் ரிசீவரை டேபிள் மேலே வைத்தான். “சார், ஒரு நொடியிலே வர்றேன்” என்று கூறிவிட்டு, அவர் பதிலுக்குக் காத்திராமல், தெருவில் இறங்கி, டாக்ஸியிடம் ஓடினான்.

“டிரைவர்.”

டிரைவர் ஓர் இளைஞன். ஏறிட்டுப் பார்த்து, “எங்கே போகணும்?” என்று கேட்டான்.

“டிரைவர் சார் ! நான் ஊருக்குப் புதுசு. எங்க மாமா போன்லே நான் வர வேண்டிய இடத்தைச் சொல்றார். தயவு செஞ்சு நீங்க வந்து கேட்டுக்கோங்கோ, ப்ளீஸ்...”

சேரனது குரலின் இனிமையும் பணிவும் அவனை எழுந்து வந்து போனில் பேசச் செய்தது.

“நான் டாக்ஸி டிரைவர் பேசறேன்.”

“டிரைவர் ! உங்களைக் கூப்பிட்ட பையனை டாக்ஸியில் ஏத்திக்கிட்டு நான் சொல்ற அட்ரஸு க்கு வா ! மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் தரேன்.”

“நூறு ரூபாயா?”

“ஆமாம் ; ஒன் ஹண்ட்ரட் ரூபீஸ்.”

“அட்ரஸ் சொல்லுங்க.”

ஹனிமேன் அட்ரஸைச் சொன்னான்.