“இரண்டும் இல்லைங்க. இந்தச் சின்ன வயதிலே ஒருவனைச் சித்திரவதை பண்ணிட்டோமேன்னு நினைச்சேன். அதனாலே சங்கடப்பட்டுட்டேன்.” “சித்திரவதையா? யாரை?” “நான் தப்பிச்சு வந்தேனே, அந்த வீட்டிலே இருந்தானே மாது... அவனைத்தான் !தீப்பற்றி எரியற துணியை அவன் மேலே போட்டேன். அவன் தலைமயிரும் சட்டையும் பத்தி எரிஞ்சதைப் பார்த்தேன். ஆனாலும் அறையைப் பூட்டிட்டு வந்துட்டேன். தீக்காயத்திலே அவன் துடிக்கமாட்டானா? நினைக்கிறபோதே நெஞ்ச நடுங்குதுங்க.” சொன்ன சேரனின் முகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தான், ஹனிமேன். ‘அந்த மாது சிறுவனான சேரனை மிருகமாகத் தாக்கியவன். அவனுக்காக இவன் பரிதாபப்படுகிறானோ!’ “சார் ! யாரும் அவனுக்கு உதவி செய்யலைன்னா தீக்காயத்திலே அவன் செத்துப் போகலாம்! அப்போ, ஒருவனை நான் கொலை செய்தவன் ஆவேன்.” வாயிலிருந்து வார்த்தைகள் வருவதற்குள், கண்ணிலிருந்து நீர்த் துளிகள் விழுந்தன! “டேக் இட் ஈஸி” என்று கூறியபடி, ஹனிமேன் தன் இடக்கையை நீட்டி அவனை அணைத்துக் கொண்டான். கார் போய்க் கொண்டே இருந்தது ! ஆனால் வேகம் குறைந்திருந்தது ! இந்திய ஒற்றர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சி கொடுத்தாலும், சமயத்தில் எங்கிருந்தோ, இரக்கம்-கருணை-பாவம் பற்றிய பயம் முதலியவற்றில் ஏதோ ஒன்று தலைகாட்டி விடுவதும், அதனால் ஏமாந்து |