பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்107

கணக்காயர் “தலை” மனைவியின் “தலை” தனித்தனியான கோலில் கோத்துக் கூட்டத்தில் எடுத்து வரப்படுகின்றன. கணக்காயர் தலை இதோ! மனைவி தலை இதோ!

என்றான் வேங்கை :

தலைகளைக் கண்ட ஊர்மக்கள் கைகொட்டி மகிழவில்லை. கண்ணீர் சிந்தினார்கள். ஒருவன் கேட்டான்.

அவர் ஏன் சாகவும் துணிந்தார்?

இன்னொருவன் சொன்னான்.

ஆலமரத்தை வெட்டக்கூடாது என்பதற்காக வேறொருவன் கேட்டான் :

சிவன் கோயிலைவிட ஆலமரம் பயன் உள்ளது என்பது கணக்காயர் கருத்தோ?

மற்றொருவன் கூறினான் :

வேறென்ன?

இந்த வினா விடை நீண்டுகொண்டே போகவில்லை. வேங்கையும், சட்டாம்பிள்ளையும் மற்றும் 6 பேரும் வெட்டப்பட்டு அங்கே குழிதோண்டி புதைக்கப்பட்டார்கள்.