பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்109

நிரப்புவார்கள். நிரப்பிய நெல்லின்மேல், கரி ஒரு பக்கமும் மஞ்சள் ஒரு பக்கமும் வைப்பார்கள். பேன் மேலே வந்து சேரும்வரைக்கும் பெண்கள் வெகு கவலையோடு நட்டுக் கவனித்துக்கொண்டேயிருப்பார்கள். கரியின் மேலே ஏறினால், காரியம் கைகூடும்.

வேறொருமுறை : பச்சிலையைக் கொண்டு ஒரு நீளக்கோடும் அந்தக் கோட்டில் குறுக்காக அநேக கோடுகளையும் கிழிப்பார்கள். “ராமர்-லட்சுமணர்-சீதை” என்று கோடுகளை எண்ணிக்கொண்டு வருவார்கள். இராமர் என்று முடிந்தால் காரியமும். காரியமும் ராமர்தான்! சீதை என்று முடிந்தால் வனவாசம்! லட்சுமணர் மத்திபம். இதிலே வேடிக்கை என்ன வென்றால், தற்செயலாய்ச் சீதையென்றும் முடிந்தால் இன்னோரிடம் பல கோடுகள் போட்டுப் பழையபடி ஆரம்பிப்பார்கள். ராமர் என்று முடியும்வரை விடமாட்டார்கள்!

எங்கள் பெண்கள் கணக்கில் நிபுணர்கள். முறம் வாங்கும்போது அந்த முறத்தின் கட்டுகளைத் தொட்டு “கொள்ள” “கொடுக்க” என்று எண்ணிக்கொண்டே போவார்கள். “கொள்ள” என்று முடிந்தால் கொள்ளுவார்கள். முறம் பொத்தலாய் இருந்தாலும் கவலையில்லை!

இன்னும் : - மோர், தயிர், தோசை இவைகள் தினம் தினம் வாங்கியதற்குச் சாணியால் வெள்ளைச்சுவர்களில் அழகாகப் புள்ளி போடுவார்கள். இரண்டு மாதத்தில் சுவர்கள் எல்லாம் கணக்குமயம் ஆகும்.

எங்கள் பெண்கள் தெய்வ நம்பிக்கையுடையவர்கள் குங்குமம் பூசி வேப்பிலை எடுத்துவரும் அனைவரும் சாபம் கொடுக்கும் சாமிதான்! அடுக்குப்பானை அரிசி, சாமிக்குச் சொந்தம்! குடுகுடுப்பைக்காரன், “அம்மா உனக்கு ஆண்பிள்ளை தங்கம்போல் பிறக்கும்” என்றால், பிறந்து விட்டதா கவே ஒரு நம்பிக்கை ஏற்பட்டுத் துணிகள் சன்மானம் நடக்