| இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல். |
| |
1924- | சோவியத்நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல். |
| |
1926- | ஸ்ரீ மயிலம் சுப்ரமணியர் துதியமுது-நூலால் சிந்துக்குத் தந்தையாதல். |
| |
1928- | நவம்பர்-3, கோபதி (மன்னர்மன்னன்) பிறப்பு, தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ. வெ. ராவுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல். |
| |
1929- | ‘குடியரசு’, ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல்; குடும்பக் கட்டுப் பாடு பற்றி இந்தியாவிலே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெறல். |
| |
1930- | பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய, சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்; தொண்டர் நடைப்பாட்டு; கதர் இராட்டினப்பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல் : தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம. நோயேல் வெளியிடல். டிசம்பர் 10-ல் ‘புதுவை முரசு’ கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல். |
| |
1931- | ‘புதுவை முரசு’ (5-1-31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச்சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் ‘கிண்டற்காரன்’ என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18-8-31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் ‘சிந்தாமணி’ என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல். |
| |
1932- | வாரிவயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் - புதினம் வெளியிடல். வெளியார் |