பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்113

23
காதலும் சாதலும்


கோடைக்காலத்து மின்னல்போல் அவன் நெஞ்சில் புதியதோர் எண்ணம் தோன்றிற்று. இடது கைக்கடிவாளத்தை அசைத்தான். குதிரை செங்குன்று நோக்கிப் பறந்தது. தோழிகளும் தமது குதிரைகளை அதே பாதை நோக்கித் துரத்தினார்கள்.

செல்வியும், தோழிமாரும் செங்குன்றை யடுத்துள்ள கண்ணிச் சோலையை அடைந்தார்கள். தமது குதிரைகளை நாவல் மரம் ஒன்றில் கட்டினார்கள். அழகாய் அமைந்த அச்சிங்காரச் சோலையில் நுழைந்தார்கள், மருளும் பார்வையுடைய மான்கள் போல.

நக்ஷத்திரங்கள் நிரம்பிய நீலவானம்போல் பச்சைத் தழைகள் அளாவிய மரங்களில் மலர்கள் குலுங்கின. எங்ஙணும் கொடிப்பூக்கள்-புதர்ப் பூக்கள் தரையில் அழகு கொழித்தன. பூங்செடிகளின் கால்களை நோக்கி மடை கோலிவிட்ட தண்ணீர் சாரைசாரையாய் ஓடிக்கொண்டிருந்தது. நிசப் தத்தில் ஊடுருவிப் பாய்ந்தது, பறவைகளின் இனிய கீதம்!

ஏ. சி. -8