பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்117

இதைக்கேட்ட செல்வி உள்ளந்துடித்தாள். பகையுள்ளத்தைத் தாண்டி அவனுடைய அன்பைத் தன்னிடம் ஒடிவரும்படி செய்ய அவளால் முடியாமற் போயிற்று.

‘என் உள்ளத்தில் குடிபுகுந்தவரின் பேர் என்ன? அதையாவது கூறலாமா’ என்று பரிதாபமாகக் கேட்டாள். இளவரசன் தன் பெயரைச் சொன்னான் ‘வேல் மறவன்’ என்று.

உள்ளம் ஒடிந்த செல்வி தன் உயிரைச் சுமந்துகொண்டு தள்ளாடி நடந்தாள். செல்வி தன் தோழிமாருடன் தன் மாளிகை சென்றாள். அவனையே நினைத்திருந்தாள் வினாடி தோறும்! ஒரு நாள் போவது அவளுக்கு ஒர் யுகம் போல இருந்தது. இவ்வாறு கழிந்த நாட்கள் அவள் கணக்குப்படி பல யுகங்களாகுமாயினும் நமது சைவப் பஞ்சாங்கப்படி இரண்டு வருடங்கள் ஆயின. வேல் மறவன் தாய்நாடாகிய செங்குன்றூருக்கும் செல்வியின் தாயகமாகிய கேணிச் சுரையூருக்கும் சண்டை மூண்டது.

கேணிச்சுரையூரின் கோட்டைவாசலைக் கடந்து எதிர்ப்படை அரசமாளிகையை முற்றுகையிட்டு விட்டது. கேணிச் சுரையூரின் காக்கைக் கொடி பிடிபடும் என்று இருபக்கத்தாரும் நிச்சயிக்கலானார்கள். கேணிச் சுரையூரின் கவிஞர்கள் தமது தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க சுதேச வாலிபருக்கு எழுச்சியை, ஆவேசத்தைத் தூண்டினார்கள். அதனால் அந்நாட்டுப் பெண்கள் போல் கலந்து கொள்ளக் கூடாது என்பது அந்நாட்டின் சட்டமாதலால் பெண்களின் எழுச்சி அடைந்த தோள்கள் அடக்கப்பட்டன. கேணிச் சுரையூரில் வயது வந்த வாலிபர் அனைவரும் போர்க்கோலம் பூண்டார்கள். இனந்தெரியாத வாலிபன் ஒருவன் கேணிச் சுரையூரின் படைக்குத் தலைமை வகிக்கலானான்.

அரச மாளிகையை முற்றுகையிட்டிருந்த செங்குன்றூர்ப் படையில் இனந்தெரியாத அந்தச் சிங்க வாலிபன் சிறுபடை