பக்கம் எண் :

118ஏழைகள்

ஒன்றுடன் புகுந்தான்! செங்குன்றூர்ப்படை சிதறி ஓடிற்று அது கோட்டை வாசலுக்கு வெகுதூரத்தில் அமைந்திருந்த வெகுதூரத்தில் அமைந்திருந்த தன் கூடாரத்தை நோக்கிப் பறந்தது.

கேணிச் சுரையூரின் அரசன் மகிழ்ந்து கூடாரத்தை நோக்கி ஓடிய எதிரிகட்குப் பெண்ணுடைகளைக் கழுதைமேல் அனுப்பினான். கோட்டை வாசல் கடந்து உள்நுழைந்த பகைவர் திருப்பியடிப்பட்டால் அவர்கள் எதிரிகளால் தரப்படும் பெண்ணுடைகளை அணிந்துதான் மீண்டும் போர் செய்ய வேண்டும் என்பது இருநாட்டைப் பொறுத்த நிபந்தனை.

செங்குன்றூர்ப்படைக்குத் தலைமை வகித்திருந்த வேல் மறவன் கழுதை தூக்கிவந்த பெண்ணுடைகளை வெட்கத்தோடு வாங்கித் தன் வீரர்கட்குத் தந்ததோடு தானும் ஒன்று தரித்துக் கொண்டான்.

மீண்டும் போர்க்களத்தில் இரு பக்கத்துப் போர்முரசுகளும் போரை ஆரம்பித்தன. உறவென்பதில்லைநான் என்பதில்லை. தம் தம் தாய்நாட்டின் வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு போர் செய்தார்கள். தலைகள் பனங்குலை சரிவதுபோல் சரிந்தன. போர்வீரர்கள் ஒருவருக்கொருவர் வீதம் நின்று வாள்யுத்தம் நடத்தினார்கள்.

இனந்தெரியாத அந்தப் படைவீரனை நோக்கி, அதோ நாணத்தால் முகம் மறையும்படி பெண்ணுடையால் மூடி நிற்கும் அந்த வீரன்தான் பகைப்படைக்குத் தலைவன் என்று கூறினான் ஒரு வேஷக்காரன். இனந்தெரியாத அப்படைத்தலைவன் அவன்மேற் பாய்ந்தான். இரு தலைவர்க்கும் வாட்போர் மூண்டது. விரைந்து சுழலும் இருவாள்களும் மின்னல் ஒளியை உண்டாக்கின. போர்க்கலையின் நுட்பத்தை மற்ற வீரர்கள் உற்றுக் கவனிக்கலானார்கள், தம் தம்