பக்கம் எண் :

120ஏழைகள்

24
தமிழ்ப்பெண் மனப்பான்மை


பண்டைத் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ்ப்பெண்கள் எப்படிப்பட்ட உயர்ந்த மனப்பான்மை உடையவர்களாக யிருந்தார்கள்?அக்காலத்தில் தமிழ் ஆடவர்கள் நிலை என்ன?அவர்கள் ஒழுக்கம் எப்படிப்பட்டது? ஆகிய பல விஷயங்களை அடியில் வரும் ஓர் பழந்தமிழ் வெண்பா விளக்குகின்றது.

தமிழ் மங்கை தன் தோழியிடம் கூறுகிறாள் :

வெண்பா

ஐயைந் திருபத்தைந் தோரிரவில் தான்வரினும்
வெய்ப கணையைந்தும் வேள் விடினும்-தையல் நல்லாள்
கையைந் தறியாத காளைகள் தோள் சேருவளோ
மெய்யைந் தறப் பெற்ற மின்

கேளடி தோழி. அழகும் விவேகமும் உடைய இவள் (நான்) இருபத்தைந்து பொருள்களையும் ஒரே ராத்திரியில் எனக்கு கொடுப்பவனாக இருந்தாலும் சரி, அப்படி அவன் கொடுக்க வரும் சமயத்தில், மன்மதன் தனது ஐந்து கணையையும் என் மேல் பாய்ச்சி எனக்குக் காதல் நோயை உண்டு