25 தேசியப் பத்திரிகைகள்
தமிழ் நாட்டின் தேசியப் பத்திரிகைகளின் இன்றைய போக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி என் அபிப்பிராயத்தை விளக்கும்படி என் தோழர்கள் சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். ஒரு கதை- ஏற்கனவே போட்ட திட்டப்படி சங்கரன் வீட்டின் எதிரில் பஸ் வந்து நின்றது. இதில் சங்கரன் பந்துக்கள் சுமார் பத்துப்பேர்களும், சங்கரன் மனைவியும், சங்கரன் தாயும் ஏறி உட்கார்ந்தார்கள், திருவிழா நடக்கும் ஊர் சுமார் 40 மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. பஸ் புறப்பட்டது. சங்கரன் தன் தாயை நோக்கி ஆரம்பித்தான். ‘ஏனம்மா! எனக்கும் பால் கொண்டுவந்து வைத்தீர்களே, அந்தச் செம்பு பொத்தல் செம்பு என்பதை நீங்கள் கவனிக்கவே இல்லை போலிருக்கிறது’ என்று வெகு சாந்தமாகவும் மரியாதை கோணாத முறையிலும் கேட்டான். |