தாய்க்குத் திடுக்கென்று எடுத்துப் போட்டது. ‘ஐயோ! அப்பா! நான் கவனிக்கவே இல்லையே, பால் எல்லாம் ஒழுகி விட்டதா?’ என்று வருந்தினாள் அவள். சங்கரன் : | பக்ஷணம் சாப்பிட்டபின் பாலைப் பார்த்தேன். எல்லாம் மேஜைமேல் ஓடியிருந்தது. செம்பில் துளி கூட இல்லை. நான் பக்ஷணம் சாப்பிடுவது கொஞ்சம்; என் பசிக்கு ஆதரவு பால்தான். ஏன் உங்களுக்குத் தெரியாதா? தெரிந்தது தானே அம்மா. | | | தாய் : | ஆம், அப்பா! நான் கவனிக்கவேயில்லை. பசியாக இருக்கிறாயே, என்ன பண்ணலாம்! | | | சங்கரன் : | முதலில் பிள்ளையின் நன்மையில் தாய்க்கு அக்கரையிருக்க வேண்டும்; எப்போது பார்த்தாலும் மருமகள் மேலும் மற்றவர்கள் மேலும் ‘வாழ் வாழ்’ என்று கத்தினால் மாத்திரம் போதுமா? இரண்டாவது, அடிக்கடி உபயோகிக்கும் பாத்திரத்தின் நிலையை கவனிக்க வேண்டும். அது சமுசாரிக்கு அழகு. ஏதோ குடும்பத்தில் பெரிய அனுபவசாலிபோல் நீட்டினால் மாத்திரம் போதுமா? மூன்றாவது பிள்ளை சாப்பிட்டு முடித்தானா என்பதைக் கடைசிவரைக்கும் இருந்து கவனிக்க வேண்டும். அவன் சாப்பிட்டால் என்ன, ஒழிந்தால் என்ன என்ற மனோபாவம் கூடாது. பலகாரம் வைத்தீர்கள். அதில் ஓர் இட்லிகூடச் சாப்பிடவில்லை. பாலைப் பார்த்தேன் ஒருதுளி? பசி காதை அடைக்கிறது. |
இந்த வார்த்தைகளை யெல்லாம் சங்கரன் பஸ்ஸிலிருந்த பந்துக்களில் ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி முன்னிலைப்படுத்தி சொல்லிக் கொண்டிருந்தான். அனைவரும் சங்கரன் தாயை வெறுத்தார்கள். சங்கரளை ஆதரித்துப் பேசினார்கள். அப்போது சங்கரன் தாயார் முகத்தைப் பார்க்க வேண்டுமே! |