பஸ்ஸிலிருந்த சொந்தக்காரர்கள் சங்கரனின் நிலைமைக்கு வருந்தினார்கள். நடுவழியில் அவனுக்கு மரணம் நேர்ந்து விடுமல்லவா?தான் செய்தது தப்புத்தானே! என்ன பண்ணுவாள். தாய். செம்பில் துவாரமிருந்ததைத் தாய் அறியவில்லை. இது உண்மையான சங்கதி. இது பற்றித்தான் இத்தனை அவமானப்பட வேண்டுமா?என்று அவள் நினைத்தாள். மற்றவர்களிடம் இதுபற்றிக் கூறி அபவாதத்திலிருந்து தன்னை மீட்க நினைத்தாள். அதுதானே முடியாது. தன் பிள்ளைக்குத் தான் செய்தது குற்றமா அல்லவா? சும்மா இருந்துவிட்டாள் தன் சுபாவப்படி! திருவிழாவுக்குத் தமது ஊரார் எல்லாரும் வந்திருந்தார்கள். அவர்கள் கட்டாக அனைவரும் ஒரு சத்திரத்தில் இறங்கி இருந்தார்கள். சங்கரன் தன் ஊராரை எல்லாம் ஒருமுகப்படுத்தி, ‘ஒரு வைத்தியர் இங்கு கிடைப்பாரா’என்று கேட்டான். “இல்லை” என்று மாத்திரம் அவர்கள் சொன்னார்கள்‘ஏன் வைத்தியம்’ என்று சங்கரன் சொன்னான். ‘எதற்காக வைத்தியர்’ என்று அவர்கள் கேட்டார்கள். கதையை ஆரம்பித்தான் சங்கரன். ஒருவாறு முடித்தான் தன் தாய்மேற் பழியை சுருக்கமாக முடித்துவிட்டதாக நினைத்தான். மேலும் சொல்லுகிறான். (என்னைப் பட்டினி போட வேண்டும் என்ற நோக்கத்தோடு பொத்தற் செம்பில் பாலை வைத்தாள் தாய். பெற்றவளாயிருந்தால் அப்படிச் செய்வாளா, என் உடம்பின் நிலை இவளுக்குத் தெரியாததல்லவே? காலைப் பட்டினியால் என் உடல் தத்துக்குத்தலாயிற்று. என் பந்துக்கள் இதோ இருக் கிறார்கள். இவர்களில் ஒருவராவது என் தாயின் அட்டூழியத்தை ஆதரிக்கிறார்களா?கேளுங்கள். அது போகட்டும். |