| டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி. கி. நாராயணசாமி (நாயுடு). தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார், “தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்” என்று பாராட்டினார். டாக்டர். மாசிலாமணியார் நடத்திய ‘தமிழரசு’ இதழில் தொடர்ந்து எழுதுதல். தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் ‘விந்தன்’. |
1944- | பெரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். ‘இன்ப இரவு’ (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு, (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வெளியிடல். ‘சதிசுலோசனா’ என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாட்டு எழுதுதல். குடும்ப விளக்கு II வெளியிடல், செட்டி நாடு முழுதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என். எஸ். கே. வுக்காக ‘எதிர்பாராத முத்தம்’ - நாடகமாகத் தீட்டித் தருதல். ‘கற்கண்டு’ ‘பொறுமை கடலினும் பெரிது’ இணைத்து எள்ளல் நூல் வெளியிடல். |