1945- | புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது), ‘எது இசை’ நூல்கள் வெளியிடல். |
| |
1946- | ‘முல்லை’ இதழ் தொடங்கப்பட்டது. அமைதி - ஊமை நாடகம் வெளியிடல். (29-7-46) பாவேந்தர் ‘புரட்சிக்கவி’ என்று போற்றப்பட்டு ரூ. 25000- கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி, அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8-11-46-ல் முப்பத்தேழாண்டு தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல். |
| |
1947- | புதுக்கோட்டையிலிருந்து குயில் 1, 2 மாத வெளியீடு. ‘சௌமியன்’ நாடக நூல், பாரதிதாசன் ஆத்திசூடி வெளியிடுதல், சென்னையில் ‘குயில்’ இதழ். ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல், புதுவையிலிருந்து ‘குயில்’ ஆசிரியர் - வெளியிடுபவர். ‘கவிஞர் பேசுகிறார்’ சொற்பொழிவு நூல். |
| |
1948- | காதலா கடமையா? காவியம்; முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்) கடல்மேற் குமிழிகள் காவியம்; குடும்ப விளக்கு திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி நூல் வெளியிடல். ‘குயில்’ மாத ஏட்டிற்குத் தடை; நாளேடாக்கல். கருஞ் சிறுத்தை உருவாதல். |
| |
1949- | பாரதிதாசன் கவிதைகள் 2ஆம் தொகுதி; சேர தாண்டவம் (முத்தமிழ் நாடகம்); தமிழச்சியின் கத்தி காவியம், ஏற்றப்பாட்டு வெளியிடல். |
| |
1950- | குடும்ப விளக்கு குடும்ப விளக்கு V வெளியிடல். |
| |
1951- | செப்டம்பர் 15-ல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம் அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது; கழைக் கூத்தியின் காதல் - வெளியிடல். அறுபதாண்டு மணிவிழா - திருச்சியில் நிகழ்வுறல் : |