கடப்பாரை-ஆம் அரசே. என் செயல் பண்புகள் தாழ்ந்தவைகளா? நாங்கள் காலையில் குளிக்கிறோம். உண்ணும்போது உறவினை அழைக்கிறோம். இதனால் உலகுக்கு நாங்கள் நல்ல வழிகாட்டிகள். மேலும் ஊரைத் தூய்மைசெய்கிறோம். ஆதலினால் பிறர் நலம் பேணும் அறவோர் இல்லையா நாங்கள்? யானை-நீங்கள் அறவோர். அதுபற்றிப் பேச்சில்லை! இருக்கட்டும். நாளை தீர்ப்புச் சொல்லுகிறேன். களைப்புத்தீர நீர் சற்றே உட்கார்ந்திருந்துபோம். இன்று என்ன உணவு உண்டீர்? கடப்பாரை-வழியில் ஒரு சிறியவள் அப்பம் வாங்கிக்கொண்டு போனான். அதை அப்பிக்கொண்டு போய் ஒரு மரக்கிளையில் வைத்து உண்டது தவிர வெறும் பட்டினி கிடக்கிறேன். காக்கை போய்விட்டது. மறுநாள் காலையிலேயே முகிலி அரசனின் தீர்ப்பைக் கேட்க வந்துவிட்டது. முகிலி அரசன்-என்ன காக்கையாரே! காலையில் வந்துவிட்டீர். உணவுண்டீரா? காக்கை-ஆம் அய்யா. சிட்டுக்குருவி ஒன்று, தன் இரு குஞ்சுகளையும் விட்டு நகர்ந்தது. நல்ல வேளை என்று அவ்விரண்டு குஞ்சுகளையும் கொன்று தின்று விட்டேன். இனித் தான் தக்க இரை தேட வேண்டும். தீர்ப்புக் கூறுங்கள். யானை-காக்கையாரே, உன் வழக்குப் பற்றிய தீர்ப்பை நாளைக்குத்தான் கூறமுடியும். போய் வாரும். காக்கை போய் மறுநாள் காலை யானை அரசரிடம் வந்து தீர்ப்புக்குத் காத்திருந்தது. யானை-என்ன காக்கையாரே, உண்டீரோ? |