பக்கம் எண் :

16 

1963- 

தோழர் ப. ஜீவானந்தம் மறைவு குறித்துப் ‘புகழ் உடம்பிற்குப் புகழ்மாலை’ பாடல் எழுதுதல். சீனப் படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறு கொண்டெழப் பாடல்கள் எழுதுதல், பன்மணித்திரள் நூல் வெளியீடு. 72-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. வழக்கறிஞர் வி. பி. இராமன் தலைமையில் நடைபெற்றது. ‘பாரதியார் வரலாறு’ திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

  

1964- 

பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21-ல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவை கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72 ஆண்டு 11 மாதம் 28 நாள்.

  

1965- 

ஏப்ரல் 21. புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் எழுப்பப் பட்டது.

  

1968-  

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னை கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.

  

1970- 

மார்ச், கவிஞரின் ‘பிசிராந்தையார்’ நாடக நூலுக்கு சாகித்ய அகாதமி ரூ. 5000 பரிசு வழங்கியது.

  

1970- 

சனவரி - ரமணி மறைவு.

  

1971- 

ஏப்ரல் 29 பாவேந்தரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக்கவிஞர் நினைவு நூலகம் - காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

  

1972- 

ஏப்ரல் 29, பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

  

1979- 

‘கடல்மேற் குமிழிகள்’ காப்பியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப்பெறல்.

- மன்னர் மன்னன்