பக்கம் எண் :

  

ஏழைகள் சிரிக்கிறார்கள்

1
இதயம் எப்படியிருக்கிறது?


எனது நண்பர் கோவிந்தன் ஆஸ்திகர். கொஞ்சம் பிடிவாத குணமுள்ளவர். சுயமரியாதைக் கட்சி அவருக்கும் பிடிக்காது. சமதர்மமென்றாலோ சிரித்துக் கேலி பண்ணுவார். ஒரு நாள் மத்தியானம் 12 மணிக்குச் சாப்பாட்டைப் பற்றி அவருக்கும், அவர் தகப்பனாருக்கும் வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் நான் அவர் வீட்டுத் தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். நான் இருந்தது அவர்கட்குத் தெரியாது.

கோவிந்தன் (தம் தகப்பனாரிடம் மிக்க வருத்தத்தோடு சொல்லுகிறார்) “அப்பா நான்தான் வேலையில்லாதிருக்கிறேன். நீங்களாவது வீட்டில் அடுப்புப் புகையும்படி முன் ஜாக்ரதையாய் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா?”

தந்தை : “என்ன செய்வது? இன்றைக்கு வேலை தருவதாகச் சொல்லி, அந்த மனிதன் திடீரென்று நாளைக்கு ஆகட்டுமென்று கையை விரித்து விட்டான். இன்று மத்தியானம் சமையற் செலவிற்கு அம்மா சமாளித்துக் கொள்ளுவாள் என்று நினைத்தேன். அவளுக்கும் தோதில்லை போலும். இராத்திரிச் சாப்பாட்டிற்கு எப்படியாவது ஏற்பாடு செய்

ஏ. சி. 2